புரதச்சத்து தசைகளுக்கு வலு சேர்ப்பதற்கு மிக அவசியமாகும். 20க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கை தான் புரதம் ஆகும்.
நமது உடம்பில் செல்களை புதுப்பிக்கவும், காயம், புண் ஆறுவதற்கும், என்சைம், ஹார்மோன், வைட்டமின், பித்தநீரு், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாக புரதம் அவசியமாகின்றது.
இதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இமுனோ குளோபுலுின்களை தயாரிக்கவும் தேவைப்படுகின்றது. தினமும் சராசரியாக நமது உடம்பிற்கு 50 கிராம் புரதம் அவசியம்… இவற்றை நாம் உண்ணும் உணவிலிருந்தே பெறலாம்.
சைவ உணவுகளை உண்பவர்கள், பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துக்கள் மூலமாக புரதத்தினை பெற்றுக்கொள்ளலாம். இதே போன்று அசைவைம் சாப்பிடுபவர்கள், மீன், முட்டை, இறைச்சி வழியாக புரதத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இயற்கை உணவை சாப்பிடும் போது புரதச்சத்து மட்டுமின்றி உடம்பிற்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது என அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடுவதால், உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் செயற்கை பானங்களில் இருக்கும் புரதத்தை உடலானது செரிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். சிலரோ உடல் எடையைக் குறைக்க புரதச்சத்து சம்பந்தமான பவுடரை மட்டும் எடுத்துக்கொண்டு உணவை சாப்பிடாமல் இருக்கின்றனர். இது மிகவும் தவறு ஆகும்.
உடற்பயிற்சி கூடத்திற்கு செல்பவர்கள் என்றால் தினமும் இரண்டு முட்டை வெள்ளைக்கரு, பருப்பு குழம்பு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் எடுத்துக்கொண்டால் தேவையான புரதம் கிடைத்துவிடும். ஏனெனில் உடற்பயிற்சி மேற்கொள்வர்களுக்கு அதிகளவில் புரதம் தேவைப்படுகின்றது.