மரவள்ளிக் கிழங்கில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கின்றன.
மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் மாவில் உயிரியல் மற்றும் இரசாயன கட்டமைப்பு பண்புகள் உள்ளதால் அதை எளிதாக திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆக மாற்ற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும்.
உணவு மற்றும் மருந்து தயாரிக்கும் பல தொழிற்சாலைகளில் தற்போது மரவள்ளிக் கிழங்கு மாவைப் பயன் படுத்தி திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. செரிமான மண்டலத்தை சீராக்கி, குடல் இயக்கத்தை சீர் செய்கிறது.
மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் போலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது. பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் ஆன்டிஆக்சிடன்டுகளும் மரவள்ளிக்கிழங்கில் இருக்கின்றன.
உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாத பிரச்சனையாக மாறியுள்ளது. இயற்கையாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், மரவள்ளி கிழங்கை அன்றாட உணவில் எடுத்துக்கொண்டால், அவற்றில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க உதவும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும் மரவள்ளி கிழங்கு அனீமியா உள்ளிட்ட நோய்களை குணப்படுகிறது.
இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியின் காரணமாக அதிக ஆக்ஸிஜன் உடல் உறுப்புகளுக்கு செலுத்தப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, பல ஆரோக்கிய பலன்களைக் கொண்டது.
சரும பிரச்னைகளுக்கு தீர்வு
மரவள்ளிக் கிழங்கு தோல் மற்றும் பல்வேறு சரும பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. மரவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை அரைத்து முகத்தில் பூசி, அது நன்கு காய்ந்ததும், முகத்தைக் கழுவினால் சருமப் பிரச்சனைகள் தீரும்.
முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை நீக்கி, சருமத்தின் துளைகளை மூடும் மரவள்ளிக் கிழங்கு சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.