உடலின் செயற்பாட்டிற்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேவைப்படுகின்றது. இந்த ஊட்டச்சத்துக்களில் ஏதாவது ஒரு சத்து குறைவாக இருந்தாலும் அது எமது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
ஒவ்வொரு ஊட்டச்சத்து குறைபாட்டிற்கும் ஒவ்வொரு உணவுகள் இருக்கின்றன. அவற்றை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருந்து நமக்கு பலன் கிடைக்கும்.
அந்த வகையில் உடலில் கால்சியச்சத்து குறைந்தால் அதை எப்படி அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தாமரை விதைகளை தினமும் 2 அல்லது 4 சாப்பிட்டு வந்தால் சராசரி மனிதனை விட பல மடங்கு பலன் கிடைக்கும். இதை பச்சையாக சாப்பிடாமல் வறுத்து இனிப்பு சேர்த்து உண்ணலாம்.
வாரத்தில் 3 நாட்களாவது பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தாமரை விதைகளை பாலில் சேர்த்து குடித்தால் அது கால்சிய சத்தை இன்னும் அதிகமாக்கும்.
இதனால் தசைகள் வேகமாக வளர்ச்சி அடையும். இதில் கால்சியம் மட்டுமல்லாமல் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைவாகக் கிடைக்கின்றன.
இதனால் எந்த பக்கவிளைவுகளும் வராது.