உடலின் சூட்டை தணிக்கவும் இந்த கொடிய சூரிய வெப்பத்தில் இருந்து உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்ளவும் வெங்காயம் முக்கிய பொருளாக அமைகின்றது.
வெங்காயத்தை பச்சையாகவோ சமைத்தோ தாரளமாக சாப்பிடலாம் இதனால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த வெங்காயம் கோடை வெப்பத்தில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.
வெங்காயத்தில் இருக்கும் நீர்ச்சத்து நீரேற்றமாக உடலை வைத்திருக்க உதவுகின்றன. இதனால் அதிக நேரம் கடினமான வேலைகள் செய்தாலும் உடல் எளிதில் சோர்வடையாது.
தினமும் வெங்காயம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் சூரிய நச்சு கதிர்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன.
வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் கலவைகள், அலர்ஜி போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கின்றன. வெங்காயம் செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது.
இதில் இருக்கும் நொதிகள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்காக உதவுகின்றன. எனவெ இந்த கோடை காலத்தில் பச்சையாக வெங்காயம் எடுத்துக்கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்.