உடன் அமைச்சரவையை கலைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.
ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு குறித்த கூட்டமைப்பு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோாிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.