அணு ஆயுதங்களை வாங்கும் உக்ரைனின் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் என ஐ.நா பொதுச்சபை அமர்வில் ரஷ்யா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது.
ஐ.நா பொதுச்சபை அமர்வில் பதிவு செய்யப்பட்ட ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோஃபின் (Sergeĭ Viktorovich Lavrov) உரை ஒளிபரப்பப்பட்டது. அதில், முன்னாள் சோவியத் யூனியனின் நாடுகளில் மேற்கத்திய நாடுகள் ராணுவ தளங்களை கட்டக்கூடாது, என அவர் எச்சரித்தார்.
அணு ஆயுதங்களை வாங்கும் உக்ரைனின் முயற்சியை ரஷ்யா தடுத்து நிறுத்தும் என்றும் லாவ்ரோஃப் கூறினார். அணு ஆயுதங்களை வாங்க உக்ரைன் முயற்சித்து வருவதாகவும் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கோ லாவ்ரோஃப் (Sergeĭ Viktorovich Lavrov) கூறியிருக்கிறார் .
யுக்ரேனின் செயல்பாடு மிகப்பெரிய அச்சுறுத்தல் மற்றும் அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் (Sergeĭ Viktorovich Lavrov) கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
எனினும், அதே அமர்வில் இடம்பெற்ற யுக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா (Dmytro Kuleba) கூறுகையில், உக்ரைனில் கண்மூடித்தனமாக ரஷ்யா தாக்குதல்களை நடத்தி போர்க்குற்றம் இழைப்பதாக குற்றம்சாட்டினார்.
அத்துடன் ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு அணுகுமுறையையும் படுகொலை ஆயுதங்களைப் பயன்படுத்துவதையும் நிறுத்த சிறப்பு அமர்வைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் டிமிட்ரி குலேபா (Dmytro Kuleba) வலியுறுத்தினார்.
மேலும் யுக்ரேனில் குடியிருப்பு கட்டடங்கள், மழலையர் பள்ளிகள், ஆதரவற்றோர் காப்பகங்கள், மருத்துவமனைகள், அவசரகால வாகனங்கள், பயணிகள் பேருந்துகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள் என எல்லோரையும் இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்துவதில் எந்த நியாயமும் இல்லை, என்றும் குலேபா (Dmytro Kuleba) கூறினார்