உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முழு மூச்சுடன் ரஷ்யப் படைகள் மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர எல்லையிலிருந்து குறைந்தது 3 மைல்கள் தொலைவில் தற்போது ரஷ்யப் படைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கீவ்வை இலக்காக கொண்டு ரஷ்யாவின் 40 மைல்கள் நீண்ட டாங்கிகளின் அணிவகுப்பு தற்போது முன்னேறத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, உக்ரைன் படைகளும் ரஷ்யா துருப்புகளுக்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, மேற்கு நகரமான இர்பின் மற்றும் புரோவரியின் கிழக்குப் பகுதியிலும் ரஷ்யப் படைகள் இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் புரோவரியில் கடும் எதிர் தாக்குதலை ரஷ்யப் படைகள் எதிகொண்டுள்ளதாகவும், Colonel Andrei Zakharov கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.