ஈஸ்டர் தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் அது அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் பின்னர் நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த விதத்தில் அது தீவிரவாத பயங்கரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் தாக்குதலின் விளைவு மற்றும் தாக்குதல் பற்றி விபரங்களை பார்க்கும்போது அது அரசியல் தாக்குதல் என்பது புலனாகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு முக்கிய சூத்திரதாரியின் நோக்கத்தை தாக்குதலின் பின்னால் இருந்தவர்களை அடையாளப்படுத்த தவறியுள்ளது. அறிக்கையில் தாக்குதலை தடுக்க முடியாமல் போனமைக்கான காரணங்களை மாத்திரம் முன்வைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த சில பாதுகாப்பு தலைவர்கள் தாக்குதலின் பின்னணியில் மறைகரமொன்றின் சதி உள்ளது. இது பாரதூரமான நிலைமை இதனை விசாரணை செய்யவேண்டும் சதிமுயற்சி உள்ளதா என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும்.
தாக்குதலை தவிர்க்க முடியாமல் போனமைக்கான காரணங்களை சரிசெய்ய முடியும் ஆனால் சதித்திட்டம் குறித்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் அவ்வறானதொரு தாக்குதல் இடம்பெறும் ஆபத்துள்ளது எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்