இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய உறைவிடப் பாடசாலையின் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுமார் 60 சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
திங்கட்கிழமை (01) பிற்பகல் தொழுகையின் போது சிடோர்ஜோவில் உள்ள அல்-கோசினி பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்தது.
Image
இதன்போது கட்டிடத்திற்குள் இருந்த 100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
கட்டிடத்தின் அடியில் இன்னும் 59 சிறுவர்கள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், 72 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிர் பிழைப்பதற்கான எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை என்று இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த துயர சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர்.
மேலும் இறப்பு எண்ணிக்கை 64 ஆக உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.