இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு, விசா வழங்க இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் முடிவு செய்துள்ளது
அத்தகைய ஆவணங்கள் தேவைப்படும் இலங்கையர்கள் தங்கள் கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்களுடன் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வருமாறு தூதரகம் அறிவுறுத்துகிறது.
செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்களை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு எகிப்து வழியாக பயணிக்க 96 மணிநேர விசா வழங்கப்படுகிறது, இதற்காக 50 அமெரிக்க டொலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக, இஸ்ரேலிய தூதரகங்கள் 120 ஷெக்கல்கள் எல்லைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

