காசாவில் இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக திங்களன்று
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த திட்டத்தின் ஒரு முக்கியமான முதல் கட்டத்தில், ஹமாஸ் அனைத்து உயிருடன் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியது.
அதேநேரத்தில் இஸ்ரேல் சுமார் 2,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தது.
இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களை அரவணைத்து மகிழ்ச்சியுடன் கதறி அழுதது உணர்ச்சிகரமான காட்சிகளாக இருந்தன.
இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்காக, காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பேருந்துகளில் வந்தடைந்தபோது, மக்கள் கொடிகளை அசைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
முதல் பணயக்கைதிகள் அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்த சில நிமிடங்களுக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலில் தரையிறங்கினார்.
(13)
மேலும், இஸ்ரேலின் நாடாளுமன்த்தில் உரையாற்றிய அவர், “புதிய மத்திய கிழக்கில் ஒரு வரலாற்று விடியலை” அறிவித்தார்.
பின்னர் அவர் எகிப்தில் நடைபெறும் உச்சிமாநாட்டுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறினார்.
அங்கு அவரது காசா அமைதித் திட்டத்தின் பிந்தைய கட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக 20க்கும் மேற்பட்ட தலைவர்களைச் சந்தித்தார்.
உச்சிமாநாட்டில் எகிப்து, கட்டார், துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகியவை காசாவை இடிபாடுகளில் மூழ்கடித்த இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
இருந்த போதிலும், இராஜதந்திர கொண்டாட்டங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே மீண்டும் இணைவதன் மகிழ்ச்சிக்கு மத்தியில், போர்நிறுத்தம் நீடித்த அமைதியாக கட்டமைக்கப்பட வேண்டுமானால் இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன.