இளம் பெண் ஒருவரை கடத்தி அவரது தலையை மொட்டை அடித்து, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை Rennes (Ille-et-Vilaine) நகரில் இடம்பெற்றுள்ளது. 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது தலைமுடியை முற்றாக மொட்டை அடித்து, பாலியல் பலாத்கார அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
காவல்துறையினர் மிக வேகமாக செயற்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர். இச்செயலில் 19, 23, 27, 31 வயதுடைய ஆகிய நான்கு பெண்களும், 20, 21 வயதுடைய இரு ஆண்களும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
திங்கட்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் தனித்திருந்த குறித்த இளம் பெண்ணையே இவர்கள் கடத்தியுள்ளனர். பின்னர் அவரை வாகனம் ஒன்றில் ஏற்றி அதற்குள் வைத்தே தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அவரது ஆடைகளை களைய முற்பட்டுள்ளனர். பின்னர் வலுக்கட்டாயமாக அவர் பிடிக்கப்பட்டு அவரது தலை மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்து, மேற்கொண்டு வருகின்றனர். கைதான அனைவரும் தொடர்ந்தும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்