இந்தியாவில் மணிப்பூரில் பழங்குடியின இளம் பெண்களை நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அதோடு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிகழ்வு கடந்த மே மாதம் 4 ஆம் திகதி கங்போக்பி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
மே 3 ஆம் திகதி நடைபெற்ற பேரணியின்போது வன்முறை வெடித்த அடுத்த நாள் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தும்படி பொலிஸாருக்கு முதல் மந்திரி பிரேன் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், ”மணிப்பூரில் இருந்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை படங்கள் நெஞ்சை பதற வைக்கின்றன.
பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் அளவு குறைவு. சமூகத்தில் வன்முறையின் உச்சக்கட்டத்தை பெண்களும் குழந்தைகளும் சுமக்க வேண்டியுள்ளது” என தனது ஆதங்கத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளிப்படுத்தியுள்ளார்.