ஒருவரது வாழ்க்கையை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன.
நமது வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால், நாம் குடியிருக்கும் வீடு வாஸ்து விதிகளின் படி இருப்பதோடு, நமது பழக்கங்களும் சரியாக இருக்க வேண்டும்.
குறிப்பாக இரவு நேரத்தில் செய்யக்கூடாது என்று கூறும் பலவற்றை பின்பற்றுகிறார்கள்.
சாஸ்திரங்களின் படி, இப்படி பின்பற்றுவதன் மூலம் வீட்டில் தீய சக்திகள் அதிகரிப்பதோடு, வீட்டில் குடியிருக்கும் லட்சுமி தேவி கோபமடைந்து வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. மேலும் பாவம் சேரும் என்றும் கூறப்படுகிறது.
நகங்களை வெட்டுவது
சாஸ்திரங்களின் படி, சூரியன் அஸ்தமனமான பின் இரவு நேரத்தில், ஆணோ, பெண்ணோ நகங்களை வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், அது வீட்டிற்கு தரித்தித்தை கொண்டு வரும்.
வீட்டின் புண்ணியம் பறிபோகும். முக்கியமாக வீட்டில் பெரிய நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
பெர்ஃப்யூம் வேண்டாம்
வாஸ்துப்படி, இரவு நேரத்தில் ஆண்களோ, பெண்களோ பெர்ஃப்யூம் அடிக்கக்கூடாது.
அப்படி வாசனை திரவியத்தை அடித்துக் கொள்வது, வீட்டில் எதிர்மறை அற்றலை அதிகரிக்கும்.
மேலும் இது ஒருவரது மனதில் தீய சக்திகளை அதிகம் ஆதிக்கம் செலுத்தத் தூண்டும்.
கடன் கூடாது
பணத் தேவை அனைவருக்குமே எப்போதும் இருக்கக்கூடிய ஒன்று.
ஆனால் பணத்தைக் கடன் வாங்க நினைத்தால், இரவு நேரத்தில் செய்யாதீர்கள்.
அதேப் போல் யாருக்கும் இரவு நேரத்தில் கடன் கொடுக்காதீர்கள்.
ஒருவேளை செய்தால், உங்கள் வீட்டில் தங்கியுள்ள லட்சுமி தேவி, வீட்டில் இருந்து வெளியேறுவார்.
எனவே இந்த தவறையும் செய்து விடாதீர்கள்.
துளசி இலையை பறிக்காதீர்
சாஸ்திரத்தின் படி, சூரியன் அஸ்தமனமான பின் துளசி இலைகளையோ, அரச மரை இலைகளையோ பறிக்கக்கூடாது.
அப்படி பறித்தால், அது லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கி, வீட்டில் வறுமையைக் கொண்டு வரும்.
மேலும் வீட்டின் மகிழ்ச்சியும், அமைதியும் குறைந்து, வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
பாத்திரங்களை காலியாக வைக்காதீர்
இரவு தூங்கும் முன் சமையலறையில் உள்ள உணவுப் பாத்திரங்களை காலியாக வைத்திருக்கக்கூடாது.
வாஸ்துப்படி, அப்படி காலி பாத்திரங்களை வைத்திருப்பது அசுபமாக கருதப்படுகிறது.
அதுவும் இவ்வாறு வைத்தால், அன்னப்பூரணி தேவி மற்றும் லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக்கிவிடும்.
இதன் விளைவாக வீட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, பண பிரச்சனையும் அதிகரிக்கும். அதேப் போல் இரவு நேரத்தில் தலை முடியை விரித்துப் போட்டு தூங்குவதும் நல்லதல்ல.