இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” அண்மைக்காலமாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணைக்குழுவை குறிவைத்து, சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையை இழிவுபடுத்தும் வகையில் தவறான அறிக்கைகள் வெளியிடும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.