நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பதுளையில் தற்போது பல வைத்தியர்கள் சைக்கிளில் பயணிக்கின்றனர்.
பதுளையில் வைத்தியர்கள் சிலர் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சைக்கிளில் வைத்தியசாலைக்கு செல்வதாக வைத்தியர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
பலரும் பெற்றோல் தட்டுப்பாடு என கூறிவிட்டு இவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டால் நோயாளர்களின் நிலை பாரிய சிக்கலில் முடிந்துவிடும்.
இந்நிலையில் உயிரைக் காப்பாற்ற தங்களை அர்ப்பணிக்கும் இவ் வைத்தியர்களுக்கு இணையவாசிகள் நன்றி தெரிவிப்பதுடன், எரிபொருள் தடுப்பாடு என கூறி வீட்டில் முடங்காது சமூக அர்பணிப்புடன் சேவையாற்றும் அந்த மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்