மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள், கொவிட் பரவலை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என இலங்கை மருத்துவர்கள் சங்கம் (SLMA) தெரிவிக்கின்றது.
நாடுமுழுவதும் தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இலங்கை மருத்துவர்கள் சங்கம் (SLMA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது