இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் வங்கிக்கும் கடன் வழங்குவதற்கு இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி முகாமை (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகளில் திருத்தம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் தற்போது இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் இருக்கும் ஒரு வங்கிக்கோ அல்லது தனிநபருக்கோ இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதியளிக்கின்றது.
அதன்படி, வெளிநாடுகளில் இருக்கக்கூடிய இந்திய வங்கியின் கிளைகள் தற்போது பூட்டான், நேபாளம் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒரு வங்கிக்கோ அல்லது ஒரு நபருக்கோ இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம்.
இந்த வளர்ச்சி இலங்கையில் உள்ள வணிகங்களுக்கு கடன் அணுகலை எளிதாக்குவதுடன் அத்தகைய கடன்களை இந்திய ரூபாயில் குறிப்பிட அனுமதிக்கும் ஏற்பாடு இலங்கை வணிகங்களுக்கு குறிப்பாக நன்மை பயக்கும்.
மேலும், மாற்று விகித அபாயங்களைக் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதி இணைப்புகளை வலுப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.