இலங்கை தொடர்பில் தென்கொரியா அந்நாட்டு பிரஜைகளுக்கு விசேட பயண ஆலோசனைகள் சிலவற்றை வழங்கியுள்ளது.
அதன்படி, அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்கொரிய வெளியுறவு அமைச்சகம் தென் கொரிய மக்களுக்கு அறிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.