இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவி உட்பட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் மாவை சேனாதிராசா விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் குழு நியமிக்கப்பட்டதும், மாவை சேனாதிராசாவுக்கு தெரியாமல் நடந்துள்ளது.
கட்சிக்குள் தலைவரை ஓரம் கட்டி, சுமந்திரன் அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளதையடுத்து, அவர் தனது கட்சித் தலைவர் பதவியை விலகியுள்ளார்.
சமீபத்தில் நடந்த தலைவர் தெரிவில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சி.சிறிதரன் அல்லது மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகிய இருவரில் ஒருவர் கட்சியின் தலைமையை வகிக்க வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது