நாட்டின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என சில எதிர்கட்சி உறுப்பினர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சற்று முன்னர் அறிவித்ததாக கூறப்படும் நிலையில் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது