இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினர் பங்குகொள்ளும் யுத்தப் பயிற்சி இன்று அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது.
நட்புறவு சக்தி என்ற இந்த பயிற்சி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக 18 இந்திய இந்திய அதிகாரிகள் அடங்கலாக 120 வீரர்கள் நேற்றைய தினம் விமானம் மூலம் மத்தளை விமான நிலைய விமானத்தை வந்தடைந்தனர்.
இந்திய இராணுவத்தின் கேனல் பிரகாஷ் குமார் தலைமையிலான வீரர்கள். நட்பறவு சக்தி கூட்டு பயிற்சி பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் பீ,என். கோகேல்வத்த தலைமையில் வரவேற்கப்பட்டனர்.