இலங்கையில் உள்ள அமைச்சர்கள் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று சுவிட்சர்லாந்தில் கடந்த வாரத்தில் நடந்தது. சுவிட்சர்லாந்தில் சாலையில் சென்ற கார் ஒன்றை மறித்த இரு பெண்கள் தம்மை ஏற்றிச்செல்ல முடியுமா என கேட்டனர். காரை செலுத்தி வந்த பெண்ணும் அதற்கு சம்மதித்து அப்பெண்களை தனது காரில் ஏற்றிச்சென்று அவர்களின் வீட்டில் இறக்கி விட்டார்.
காரை செலுத்தி வந்த பெண் சுவிட்சர்லாந்தின் அமைச்சரவை உறுப்பினரும், சுற்றுச்சூழல் போக்குவரத்து எரிசக்தி தகவல் தொடர்புத்துறை அமைச்சரான சிமோனெட்டா சொம்மாருகா Simonetta Sommaruga என அப்பெண்களுக்கு பின்னர் தான் தெரியவந்தது.
அதேசமயம் சிமோனெட்டா சொம்மாருகா 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர். சுவிட்சர்லாந்தில் 7பேர் கொண்ட அமைச்சரவையே உள்ளது. இந்த 7பேரும் சுழற்சி முறையில் ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்கள்.
இதி முக்கியமான விடயம் சுவிட்சர்லாந்தில் ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ பாதுகாப்பு உத்தியோகத்தர்களோ சாரதிகளோ கிடையாது.
ஜனாதிபதியாக இருந்தாலும் சாரதி கிடையாது. தன்னுடைய காரை தானே ஓட்டிச்செல்வார். சிலர் பொதுப்போக்குவரத்தை கூட பயன்படுத்துவார்கள். ஜனாதிபதிக்கோ அமைச்சர்களுக்கோ அரசாங்கம் வாகனம் வழங்குவது கிடையாது.
தமது சொந்த பணத்தில் தான் தமது பாவனைக்கான வாகனத்தை கொள்வனவு செய்ய வேண்டும். இலங்கையில் ஒரு அமைச்சர் வீதியில் செல்கிறார் .என்றால் முன்னுக்கும் பின்னுக்கும் பல வாகனங்கள் செல்லும், படை பட்டாளத்துடன் அமைச்சர் வலம் வருவார்.
உலக நாடுகளில் பிச்சை எடுத்து வாழும் ஏழை நாடான இலங்கையில் அமைச்சர் ஒருவருக்கான படை பட்டாளத்திற்கான ஒரு மாத செலவே சுமார் 10கோடி ரூபாவுக்கு மேல் செலவாகிறது. ஆனால் உலகில் பணக்கார நாடான சுவிட்சர்லாந்தில் ஜனாதிபதிக்கோ அமைச்சர்களுக்கோ பாதுகாப்பு படைகளோ வாகன சாரதிகளோ ஏன் சிற்றூழியர்கள் கூட கிடையாது.
இலங்கையில் இராசபக்ச, சம்பந்தன் போல சாகும் வரை பதவியில் இருக்க வேண்டும் என சுவிட்சர்லாந்து ஜனாதிபதியோ அமைச்சர்களோ விரும்புவதில்லை.
அமைச்சர் சிமோனெட்டாவுக்கு இப்போது 61 வயது. இன்னும் மூன்று வருடங்களில் அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடுவார்.
தம்மை ஏற்றிச்சென்று வீட்டில் இறக்கி விட்ட அமைச்சருக்கு அப்பெண்கள் இருவரும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்கள். அந்த கடித்ததில்,
‘எவ்வளவு அமைதியான நாடு எங்களிடம் உள்ளது, மத்திய அரசாங்க அமைச்சரவை அமைச்சர் சாதாரண பாதசாரிகளை தனது காரில் அழைத்து சென்று எங்கள் வீட்டில் இறக்கி விட்டு செல்கிறார். இந்த நாட்டில் பிறந்ததற்காக நாங்கள் பெருமை படுகிறோம் என அப்பெண்கள் தமது நன்றி கடிதத்தில் எழுதியிருந்தனர்.
இலங்கையில் ஒரு அமைச்சர் தனியாக காரில் செல்வாரா? அமைச்சர் செல்லும் காரை சாதாரண பொதுமக்கள் மறித்து தம்மை ஏற்றிச்செல்லுமாறு உதவி கோர முடியுமா? ஜனாதிபதி அமைச்சர்களுக்கு பாதுகாப்பு படை பட்டாளம் வாகனங்கள் என செலவுகள் இன்றி சிக்கனமாக இருப்பதால் சுவிட்சர்லாந்து செல்வந்த நாடாகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் அமைச்சர்கள் தமக்கான சம்பளத்தை மட்டுமே பெறுகிறார்கள். உலக நாடுகளில் பிச்சை எடுக்கும் இலங்கையில் 108 அமைச்சர்கள், அவர்களுக்கு படை பட்டாளம் சம்பளம் அமைச்சர்களுக்கு சம்பளத்துடன் கிம்பளம்.
இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் கட்டையில் போகும் வரை பதவியை விட்டு போக மாட்டார்கள். அரச நிதியில் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை.
சுவிஸ் அமைச்சரை பாராட்டிய அப்பெண்கள் இந்த நாட்டில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறோம் என எழுதியிருந்தார்கள். இலங்கையை ஆட்சி செய்யும் அமைச்சர்களை பார்த்து இலங்கை மக்கள் என்ன சொல்வார்கள்? முகநூல் பதிவிலிருந்து….

