இலங்கையில் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதால் நாட்டை ஓரிரு நாட்களுக்கேனும் முழுமையாக மூடுமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் 15 மணிநேரம்வரை மின்வெட்டு அமுலாகும் அபாயம் உள்ளது. அத்துடன் டீசல் இன்மையால் போக்குவரத்தும் ஸ்தம்பிக்கக்கூடும். அத்துடன், தொழில் துறைகளும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
எனவே, இந்நிலைமையை சீர்செய்வதற்கு சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது