இலங்கையில் விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் சந்தைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாடு முழுவதும் குறித்த தேங்காய் எண்ணை சந்தைகளில் உள்ளதா? என்பது குறித்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இதேவேளை, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிற விவகாரத்தை அடுத்து 4 நிறுவனங்கள் இறக்குமதி செய்த எண்ணெய் வகைகளை சந்தையில் விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அலி பிரதர்ஸ், சேன மில்ஸ், எதிரிசிங்க மற்றும் கட்டான ஆகிய நிறுவனங்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனங்களால் கொண்டுவரப்பட்ட எண்ணெய் வகைகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.