இலங்கையில் 2030 ஆம் ஆண்டளவில் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என தாம் நம்புவதாக ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலின் போது, தேர்தல் நாளுக்கு முன்னதாக 44 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.
எதிர்காலத்தில் இலங்கையிலும் முன்கூட்டியே வாக்களிக்கும் முறை இருக்கும். மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். தொழில்நுட்பம் முன்னேறி வருகின்றது.
பொதுமக்களும் தற்போது அதிக அறிவாற்றலுடன் இருப்பதால், அரசியலில் இனவாதத்திற்கு இடமில்லை.
இனவாதம் அல்லது மதவெறி அடிப்படையில் வேட்பாளர்கள் தமது வாக்குத் தளத்தை அதிகரித்துக் கொள்வதற்கு இனி சந்தர்ப்பம் கிடைக்காது என அவர் மேலும் கூறினார்