கடன் தவணை மற்றும் லீசிங் தவணைகளை ஒரே தடவையில் செலுத்தி நிறைவு செய்யும் சந்தர்ப்பத்தில், அதற்கான வாடிக்கையாளர்களிடமிருந்து மேலதிக தொகையை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை நிறுத்தும் இயலுமை குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உரிய தவணை காலம் நிறைவடைவதற்கு முன்னராக நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் அல்லது லீசிங் தவணையை ஒரே தடவையில் செலுத்தி நிறைவு செய்யும் போது, அதற்காக நிதி நிறுவனங்கள் செலுத்துகின்ற தொகையில் 3 வீதத்தை மேலதிகமாக அறவிடுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது