ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பசில் ராஜபக்சவின் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சியும் இந்த பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலை விட பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதன் மூலம் இரு கட்சிகளினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என நம்புவதாக மேற்கண்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதே சமயம் , நாடு பற்றி எரியும் போது , தலைமையை ஒப்படைக்க கோட்டா , சஜித் , அணுர மற்றும் பொண்சேகாவை கேட்ட போது இவர்கள் எவரும் முன்வராது பின்னடித்தார்கள்.
அந்த நேரத்தில் ரணில் தனியொருவராக களம் இறங்கினார். அதைத்தான் எரியும் தீக்குள் குதித்து நான்தான் நாட்டை மீட்டேன் என ரணில் குளியாபிட்டியில் தெரிவித்திருந்தார்.
அன்று அரகலய என மக்கள் வீதிக்கு வரவும் , ராஜபக்சவினரை துரத்தவும் காரணமானது , எரிபொருள் , கேஸ் , மின்சாரம் , உணவு தட்டுப்பாடு போன்றவைதான்.
அதை ரணில், தேர்தல் பிரசாரத்தில் நினைவுக்கு கொண்டு வந்தாலே , ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அப்படி ரணில் , ஜனாதிபதியாக தேர்வானால் , ஏனைய கட்சிகளில் மதில் மேல் பூனையாக நிற்போர் அனைவரும் ரணிலோடு இணைந்து , ரணிலின் கட்சி , பொது தேர்தலிலும் வென்றுவிடும்.
இந்த பயம் அனைத்து கட்சியினருக்கும் உண்டு. மக்கள் வறுமையில் வாடும் போது , கைவிட்ட தலைவர்கள் யார் என மக்களுக்கு தெரியும். அதேபோல கைவிட்ட தலைவர்கள் வந்து மீண்டும் மக்களை வீதியில் நிற்க வைத்தால் நிலை?
அந்த பயம் மக்களுக்கு இருந்து போகாது. அதனால்தான் பொதுத் தேர்தலை முதலில் வைக்க சில கட்சிகள் குத்தி முறிகின்றன.
பொதுத் தேர்தலில் ஓரளவாவது அதிக ஆதரவு ஏதோ ஒரு கட்சிக்கு கிடைத்தால், அதை வைத்து ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெறலாம் என ஏனைய கட்சியினர் நினைக்கிறார்கள்.
இது ரணிலுக்கு பாதகமான நிலைதான். எனவே முதலில் பொதுத் தேர்தலை , ரணில் வைக்கும் சாத்தியம் குறைவு என கணக்கிட தோன்றுகிறது. ரணில் கதிரையை விட்டு இறங்கிற வேலைகள் எதையும் செய்ய மாட்டார். என சமூக ஆரவலர் ஜீவன் பிராசத் என்பவர் குறித்த கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.