இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 39 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் ஆயிரத்து 453 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 2 இலட்சத்து 68 ஆயிரத்து 676 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 351 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.