வாழைச்சேனையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன படகு சென்னை காசிமேடு பகுதியில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் காணாமல் போன கடற்றொழிலார்களின் குடும்ப உறுப்பினர்கள் கடற்தொழில் அமைச்சர் டக்டஸ் தேவானந்தாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனையில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காணாமல் போன நிலையின் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த படகின் மூலம் திருவள்ளுர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதானி துறைமுகத்தில் உள்ளே நுழைந்துள்ளதாக கடற்தொழில் அமைச்சின் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த படகு மீன்பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது முதல் நாளிலேயே படகு என்ஜின் பழுது ஏற்பட்டு விட்டது என்றும் மேலும் காற்றுவாக்கில் அந்தமான் பகுதிக்கு சென்றதாகவும் நேற்று சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த IND TN 02 MM 2543 என்ற படகின் மூலம் இரவு 11.30 மணிக்கு திருவள்ளுர் மாவட்டம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதானி துறைமுகத்தில் உள்ளே நுழைந்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு தொலைபேசியில் தெரிவித்தாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
காணாமல் போன கடற்றொழிலார்களின் குடும்ப உறுப்பினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்டஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள், மாவட்ட கடற்றொலில் அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் இதனோடு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கின்றனர்.