இலங்கையில் நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எதிர்வரும் 7ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் தற்போது 7ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.