இலங்கையில் உள்ள இரண்டு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சற்று முன்னர் தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.