எரிபொருள் வரும் வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு உணவளித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் நீண்டநேரமாக எரிபொருளை பெறுவதற்காக அன்ன ஆகாராமின்றி அங்கு காத்திருந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அங்கிருந்தவர்களுக்கு உணவளித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரின் மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.