இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப்படையினருக்கு, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்த, தனது மக்களையும், பொதுச் சொத்துக்களையும், நாட்டையும் பாதுகாக்கும் வகையில் அதனைப் பராமரிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இராணுவ ஊடகம் அறிவித்துள்ளது.
மேலும், அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் உடனடியாக விலகிக்கொள்ளுமாறும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு குறிப்பிட்டுள்ளது.
மேலும், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகவும் இராணுவம் தங்களது பலத்தை பிரயோகிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.