நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
சித்திரை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டே விடுமுறை வழங்கப்பட்டு பத்து நாட்களுக்கு இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பானது கல்வியமைச்சால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகளை இன்றுடன் நிறைவு செய்து சித்திரை புத்தாண்டு பண்டிகையின் பின் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் போது கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என தெரியவருகிறது