இலங்கையில் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம், 55 ஆயிரத்து 566 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் இந்தியாவில் இருந்தே அதிகளவானோர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
8 ஆயிரத்து 169 பேர் இந்தியாவில் இருந்தும், 4 ஆயிரத்து 474 பேர் பிரித்தானியாவில் இருந்தும், 2 ஆயிரத்து 893 பேர் சீனாவில் இருந்தும் இந்த மாதத்தில் இலங்கைக்கு அதிகளவில் வந்துள்ளனர்.
இதன்மூலம் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 80 ஆயிரத்து 440 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.