இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 3.1% வளர்ச்சியடையும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்ளின் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இலங்கை 2022–2023 காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியால் கடுமையான மந்தநிலையைச் சந்தித்தது.
அதன் பின்னர் இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் ஒரு சீர்திருத்த திட்டத்தை மேற்கொண்டது, இதன் விளைவாக வலுவான பொருளாதார மீட்சியொன்று ஏற்பட்டது.
கடந்த ஆண்டில் வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது; இந்த ஆண்டின் முதல் அரைபகுதியில் அது 4.8 சதவீதமாக இருந்தது.
இந்த வலுவான மீட்சியின் ஒரு பகுதி வழக்கமான பொருளாதார செயல்பாடுகள் மீண்டும் இயல்புக்கு வந்ததாலேயே ஏற்பட்டது.
எனவே, அந்த வளர்ச்சியின் ஒரு பகுதி தற்காலிகமானது என்று நாங்கள் கருதுகிறோம்.

