இலங்கையின் நிலைவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான சந்திப்பு, நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் நிலைமைகள் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த கலந்துரையாடலில் உக்ரைன் போர் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.