ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் இந்தியர்கள் என்பதால் வீடுகளுக்கு செல்ல அனுமதித்தனர்.
எனினும், இலங்கையர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இவ்வாறு திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் சாந்தன் உடல்நிலை குறைவால் காலமானார். இச்சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திருந்தது.
இந்த துயர சம்பவமே நம்மில் இருந்து நீங்காமல் உள்ள நிலையில் தற்போது திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையரான ராப்ர்ட் பயஸ் உடல்நிலை குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே அச்சத்தை உண்டாக்கியுள்ளது.