இலங்கையின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை மக்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இருதரப்பு நட்பை மேலும் வலுப்படுத்தவும் ஆழப்படுத்தவும் அமெரிக்க அதிபர் பைடன் எதிர்பார்க்கின்றார்.
மேலும், இரு நாட்டு மக்களுக்கும் அமைதியான, வளமான மற்றும் பாதுகாப்பான தொலைநோக்குப் பார்வையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை பைடன் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.