இலங்கையின் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மீளமைப்பதற்காக, அதற்கான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கு 3 முன்னணி சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியினால், நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
அதன்படி, Ayres Investment Management LLP, DecisionBoundaries LLC மற்றும் Perella Weinberg LP ஆகிய நிறுவனங்களே இவ்வாறு உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.