சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் பெறுமதியான கடனை வழங்க பாகிஸ்தான் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்களை மேற்கோல்கட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்திய பின்னர், அரிசி மற்றும் சீமெந்து கொள்வனவு செய்வதற்கு இலங்கைக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க அந்நாடு எதிர்பார்த்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது