எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பூஸ்டர் டோஸ் எடுக்காமல் மக்கள் ஒன்று திரண்டால் இந்த வருட இறுதிக்குள் கொவிட் சுனாமி வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மத்தியில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.