இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் புதல்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராகம பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவ்வாறு அமைச்சர் அருந்திக்கவின் புதல்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தமக்கு ஏதேனும் தொடர்பு உண்டு என நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சர் அருந்திக்க நேற்றைய தினம் ஊடகங்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.