இச்சம்பவம் Savigny-sur-Orge (Essonne) நகரில் உள்ள அடுகுமாடி குடியிருப்பு ஒன்றின் ஏழாவது தளத்தில் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு மகிழ்ச்சியுடன் ஆரம்பித்த இந்த விருந்து, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை மிக மோசமான நிலையில் சென்று முடிவடைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6.40 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். rue Claude-Monet வீதியில் உள்ள குறித்த கட்டிடத்துக்கு வந்தடைந்த அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சுவர் முழுவதும் இரத்தம் பீய்ச்சியடிக்கப்பட்டு, மேஜை தளபாடங்கள் எல்லாம் இரத்தம் தெறிக்கப்படு இருந்தன.
அதேவேளை, கண்ணாடி போத்தல்கள், குவளைகள் என பல பொருட்கள் உடைக்கப்பட்டு சிதறிப்போய் இருந்துள்ளன.
இரத்த மாதிரிகளை சேகரித்த காவல்துறையினர், Corbeil-Essonnes நகர மருத்துவமனைக்கு ஆய்வுகளுக்காக கொண்டு சென்றுள்ளனர்.