அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரை கொண்டே நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஆளுந்தரப்பு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு இரவில் சென்று ‘டீல்’ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொள்ளுமாறு பேரம் பேசுகின்றனர்.
அமைச்சுப் பதவிகளை வீடுகளில் உள்ள பொருட்கள் என நினைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அமைச்சுக்களை பெற்றுத்தருவதாக கூறுகின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவர்கள் தூக்கிப்போடும் எலும்புத்துண்டுக்கு உழைக்கும் கொள்கை எமக்கில்லை.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் முழுமையாக பதவி விலகினால் மட்டுமே அடுத்ததாக அரசாங்கத்தை கொண்டு செல்வது குறித்து எம்மாலான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் விமல் குறிப்பிட்டுள்ளார்