தமிழகத்தில் இலங்கை தமிழர் நடத்தி வந்த மளிகை கடையின் பூட்டை உடைத்து நடந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் மளிகை கடை நடத்தி வருபவர் சேகர் (48).சேகர் மன்னாரை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது வீட்டுக்கு முன்பாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் காலையில் மூடியிருந்த தனது மளிகை கடையை திறக்க சேகர் வந்தார்.அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் கடையின் பிளைவுட் கதவின் பூட்டை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள சிகரெட் போன்றவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சேகர் கும்மிடிப்பூண்டி சிப்காட் பொலிசில் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.