பல சத்துக்களை கொண்ட அத்திப்பழத்தை இரவில் இரண்டு ஊற வைத்து உண்பதால் உடலில் என்னனென்ன நன்மைகளை கொண்டு வருகின்றது என்பதை பார்க்கலாம்.
அத்திப்பழம் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் இது பல சத்து நிறைந்த பழங்களாகும். இதில் அதிகளவான நார்ச்சத்து காணப்படுகிறது.
இதன் காரணமாக இது செரிமானத்தை அதிகரித்து வைத்திருக்க உதவுகிறது. குடலில் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்பட்டு ஆரோக்கியமான செரிமான அமைப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
இதில் இருக்கும் பொட்டாசியம் என்ற மினரல் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இந்த பழத்தில் கிளைசிமிக் காணப்படுவதால் நீரழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அற்புதமான உணவாக அமைகிறது.
இது ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்கிறது. அத்திப்பழம் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. உலர்ந்த அத்திப்பழம் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தி, தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது.
தினமும் நீங்கள் ஊறவைத்து அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் அபாயம் குறைகிறது.
இந்த பழத்தில் தூக்கத்திற்கு அவசியமான செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியை
தூண்டக்கூடிய சக்தி இருப்பதால் இதை இரவு தூங்குவதற்கு முன்பு ஊற வைத்த அத்தி பழங்களை சாப்பிட்டு வர நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.