இந்தியாவில் தன் மனைவியை அவர் விரும்பும் காதலனோடு கணவனே திருமணம் செய்துவைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவர், இரவு நேர வேலைக்குச் செல்லும்போது, அவருடைய மனைவி தன்னுடைய காதலனைக் காணச் சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒருநாள் இவர்களுக்கு இடையிலான உறவு தெரிய வந்த நிலையில், அந்தக் காதலனை கிராமத்து மக்கள் அடித்து உதைத்தனர்.
அத்துடன், அவர்கள் இருவரையும் ஊரை விட்டுச் சென்றுவிடும்படி வலியுறுத்த, அங்கு வந்த கணவரோ நிதானமாக என்ன நடந்து என்று கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் சிவன் கோவிலின் முன் திருமணம் செய்து வைத்தார் காயங்களோடு இருந்த அந்த நபர், அப்பெண்ணிற்கு குங்குமம் வைக்கும் காட்சி, அந்தப் பெண் அழும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
அதேவேளை அந்தக் காதலனுக்கும் திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கணவர் மனைவியை காதலனுக்கு மணம் முடித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.