மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவில் இன்று (26) மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேருக்கு நேர் முச்சக்கர வண்டிகள் மோதிய நிலையில் ஒரு முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து காரணமாக இரண்டு முச்சக்கர வண்டிகளும் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.